சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்வதால், அரசு அலுவலகங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் மிகவும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனைத்தொடர்ந்து, சென்னை தலைமைச் செயலகத்திலும் இன்று கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்..
சமீபத்தில் அரசு வெளியிட்ட அறிக்கையில், மாதத்தின் 2ஆவது சனிக்கிழமை அரசு அலுவலகங்கள் மூடப்பட்டு, கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையிலுள்ள, உயர் அரசு அலுவலர் அறைகள், செயலாளர் அறைகள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அறைகளிலும் ஊழியர்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும், கழிப்பறைகள், மின்தூக்கி ஆகிய இடங்களும் சுத்தம் செய்யப்பட்டன. அப்போது போலீசாரும் உடனிருந்தனர்.
தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்களும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.