Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“இந்த உணவெல்லாம் கொஞ்சம் கம்மியா சாப்பிடுங்க”… மன அழுத்தத்தை அதிகப்படுத்தும்… கவனமாய் இருங்கள்..!!

இந்த உணவு வகை எல்லாம் உங்கள் அன்றாட வாழ்க்கையில் குறைவாக எடுத்துக் கொள்ளுங்கள் மன அழுத்தத்தை உருவாக்கும் என்று கூறப்படுகிறது.

இன்றைய உலகில் இயந்திரத்தனமான வாழ்க்கை முழுவதும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். உடற்பருமன் நீரிழிவு போன்ற உடல் உபாதைகளும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்த கட்டுரையில் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் உணவு வகைகள் குறித்து பார்ப்போம்.

சர்க்கரையை முடிந்த அளவு உங்கள் உணவில் குறைத்துக் கொள்ளுங்கள். அதிக அளவு நாம் சக்கரையை உட்கொள்ளும் போது நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. இதனால் தலைவலி உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுகின்றது.

பதப்படுத்தப்பட்ட கார்போஹைட்ரேட்கள், அதாவது எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகள், சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும் உணவுகள் போன்றவற்றை குறைத்துக் கொள்வது நல்லது. இதனால் எரிச்சலான மனநிலையே நமக்கு ஏற்படுகின்றது.

அதிகளவு வேலைப்பளு இருக்கும் நாட்களில் ஒரு டம்ளர் ஒயின் நமக்கு சோர்விலிருந்து நிவாரணம் அளிக்கும் என்பதால் மதுவை அதிக அளவு உட்கொள்கிறோம். இதனால் நமக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது.

அதிக அளவு காபி குடிப்பவர்களுக்கு அதிக அளவு மன அழுத்தம் ஏற்படுகிறதாம். ஒரு நாளைக்கு ஒரு கப் காபி குடித்தால் போதுமானது. அதற்கு மேல் நீங்கள் குடிக்கும் பொழுது உங்களுக்கு அதிக அளவு மன அழுத்தம் ஏற்படும்.

அதிக அளவில் மாவு  வகைகளை நீங்கள் உட்கொள்ளும் பொழுது உங்களது செரிமான பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் ரத்தத்தின் சர்க்கரை அளவு ஏறுகிறது. இதன் காரணமாக உங்கள் மன அழுத்தம் பாதிப்படைகிறது.

உப்பு இல்லா பண்டம் குப்பைக்கு சமானம் என்பது பழமொழிதான். ஆனால் அதிக அளவில் உப்பை உணவில் சேர்த்துக் கொண்டால், அது குப்பைக்கு தான் செல்லும். அதிகளவு நாம் உப்பை எடுத்துக் கொள்ளும் போது உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் மன அழுத்தம் ஏற்படும்.

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை நீங்கள் சாப்பிடும் பொழுது அவற்றில் உள்ள வேதிப்பொருள்கள் உடல் சக்தியை பாதிப்பதோடு மட்டுமல்லாமல் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும்.

எண்ணெயில் பொரித்த உணவுகளை முற்றிலும் தவிர்த்து விடுதல் நல்லது.

Categories

Tech |