விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் சாந்தி எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், ஜிபி முத்து தானாகவே முன்வந்து வீட்டை விட்டு வெளியேறினார். இந்த நிகழ்ச்சியில் தற்போது நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் ஒன்பது பொம்மைகள் வைக்கப்பட்டிருக்கும். இதில் எட்டு பொம்மைகளை போட்டியாளர்கள் எடுத்துச் சென்ற பிறகு மீதம் இருக்கும் ஒரு பொம்மையில் யார் பெயர் இருக்கிறதோ அவர் கேமை விட்டு வெளியேற்றப்படுவார். அதோடு நேரடியாக அவர் நாமினேஷனுக்கும் செல்வார். இந்த கேம் தொடங்கியதிலிருந்து பல்வேறு சண்டைகளும், சச்சரவுகளும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
இந்நிலையில் நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் அசீம் ஆயிஷாவை வைத்து கேம் ஆடுகிறார். அதாவது அசீம் ஆயிஷாவிடம் ரச்சிதாவின் பொம்மையை எடுத்து வரும்படி கூறுகிறார். உடனே யோசிக்காமல் ஆயிஷாவும் ரச்சிதாவின் பொம்மையை எடுத்து வருகிறார். இதன் மூலம் அசீம் ஆயிஷாவை கேமை விட்டு வெளியேற வைக்க வேண்டும் என்று நினைக்கிறார். இதை கவனித்த ரச்சிதா சக போட்டியாளர்களிடம் கூறி புலம்புகிறார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அசீமை திட்டி தீர்த்து வருகின்றனர். அதாவது இதெல்லாம் ஒரு பொழப்பா. எந்த கேமாக இருந்தாலும் அதில் சண்டையை மூட்டி விடுவது, தன்னுடன் இருக்கும் மற்ற போட்டியாளர்களை தரக்குறைவாக பேசுவது போன்ற கீழ்த்தரமான வேலைகளில் தான் அவர் ஈடுபடுவதாக நெட்டிசன்கள் சாடியுள்ளனர்.