தன் முகத்தை போன்று பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தமிழ் நடிகைகள் பிரபலமாகி வருவதாக மீரா மிதுன் தெரிவித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் சீசன் -3 நிகழ்ச்சியில் நடிகை மீரா மிதுன் கலந்துகொண்டார். மேலும் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் சீமானின் நாம் தமிழர் கட்சியில் இணைத்துள்ளதாக சமீபத்தில் செய்தியை வெளியிட்டார். ஹோட்டல் அதிகாரிக்கு மிரட்டல் விடுத்தல், மேலும் பல்வேறு விஷயங்களில், பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.
இந்நிலையில் தமிழ் நடிகைகள் தன்னுடைய முகத்தை பயன்படுத்தி பிரபலமாவதாக நடிகை மீரா மிதுன் தெரிவித்துள்ளார். என்னுடைய ஸ்டைல், தோற்றம் ஆகியவற்றை காப்பியடித்து மேக்கப் மூலம் என்னை போன்ற தோற்றத்தை ஒரு தமிழ் நடிகை உருவாக்கி உள்ளார். பிக்பாஸ்-4ல் பங்கேற்ற ஒருவர் அவருடைய முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் என்னைப்போலவே மாற்ற முயல்கிறார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.