Categories
தேனி மாவட்ட செய்திகள்

இதெல்லாம் விற்பனை செய்ய கூடாது… பெண் உட்பட 4 பேர் கைது… போலீசார் அதிரடி ரோந்து…!!

தேனி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்த பெண் உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் ரோந்து சென்றபோது காட்டுபள்ளிவாசல் அருகில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்துள்ளனர்.

அந்த விசாரணையில் அவர்கள் மந்தையம்மன் கோவிலை சேர்ந்த சாந்தி(38), கோம்பை சாலை தெருவில் வசிக்கும் சரவணன்(30), மேகமலை பகுதியை சேர்ந்த சந்திரன்(34), முகமது அலி(28) என்பது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அவர்கள் கஞ்சா விற்பனை செய்தததையும் கண்டுபிடித்த போலீசார் அந்த 4 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |