Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இதெல்லாம் விற்பனை செய்யக்கூடாது… ரோந்து சென்ற அதிகாரிகள்… ஒருவரை கைது செய்த போலீசார்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பஜார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவஞானபாண்டியன் தலைமையில் காவல்துறையினர் வழக்கம் போல அப்பகுதியில் ரோந்து பணியில் .ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் ராமநாதபுரம் அலங்கச்சேரி தெருவில் சென்றபோது சந்தேகப்படும் படி ஒருவர் நின்று கொண்டிருந்துள்ளார்.

இதனையடுத்து அவரை பிடித்து விசாரித்ததில் அவர் கொத்தனார் தெருவை சேர்ந்த கோபாலகிருஷ்ணன்(52) என்பது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அவரிடம் நடத்திய சோதனையில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் இருந்துள்ளது. மேலும் அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த லாட்டரி சீட்டுகளையும் 500 ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |