Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அனைத்தும் ரத்து…. அப்ப எங்க பணம்….? பயணிகளுக்கு ரயில்வே பதில்….!!

கோயமுத்தூரில் ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டதால் முன்பதிவு கட்டணத்தை பயணிகள் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவுவதை தடுக்கும் நோக்கில் அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்தது. அதன்படி கோயம்புத்தூரில் நாளொன்றுக்கு 70க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன.

இவை அனைத்தும் நிறுத்தப்பட்டதால் கோயம்புத்தூர் நகருக்குள் வருவதற்கும், போவதற்கும் முடியாமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ரயில்கள் அனைத்தும் நிறுத்தப்பட்ட நேரத்தில் முன்பதிவு செய்தவர்களின் நிலை என்ன அவர்களுக்கு கட்டணம் திரும்ப வழங்கப்படுமா? என்று கேட்டபோது ரயில்வே அதிகாரிகள் இவ்வாறு தெரிவித்தனர்.

முன்பதிவு செய்வதற்கான கட்டணம் செலுத்துமிடம் மார்ச் 31ம் தேதி வரை மூடப்பட்டிருக்கும். பாதுகாப்புக்காக காவல்துறையினரும் பணியில் நிறுத்தப்பட்டு இருப்பர். 31ம் தேதிக்கு பிறகு ஏற்கனவே முன்பதிவு செய்ய டிக்கெட்டை வைத்துக்கொண்டு செலுத்திய கட்டணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கான டிக்கெட்களை மாற்றிக்கொள்ள 3 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |