கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக புகழ்பெற்ற எவரெஸ்ட் சிகரத்தில் (Everest) மலையேற்றம் தொடர்பான அனைத்து பயணங்களும் தற்காலிகமாக நேபாள அரசு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
உலகத்தயே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டி விட்டது. 127 நாடுகளில் குடியிருந்து வரும் கொரோனா வைரசால் 1 லட்சத்து 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 81 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரு முதியவர் மரணடைந்துள்ளார். இந்த வைரஸை கட்டுப்படுத்துவதற்கு உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே கொரோனா பீதியை தொடர்ந்து புகழ்பெற்ற எவரெஸ்ட் சிகரத்தில் மலையேற்றம் தொடர்பான அனைத்து பயணங்களும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மலையேறும் வீரர்களுக்கான அனுமதி வழங்குவது நிறுத்தப்பட்டதை அடுத்து எவரெஸ்ட் சிகரத்திற்கு செல்லும் வழி மூடப்பட்டுள்ளது. அனைத்து மலைச்சிகரங்களுக்குமான மலையேற்றம் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கான விசாக்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக நேபாள சுற்றுலாத்துறை அமைச்சர் யோகேஷ் பட்டாராய் (Yogesh Bhattarai) தெரிவித்துள்ளார்.