தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலம் அரியர் தேர்வு நடத்துவதற்கான அட்டவணையை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக தாக்கலான மனுக்கள் மீது நடந்த விசாரணையில் அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டது விதிமுறைகளுக்கு எதிரானது என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் என்பதே பதில் மனு தாக்கல் செய்திருந்தது.
இந்நிலையில் தலைமை நீதிபதி சஞ்சீவ் பேனர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற விசாரணையில் மாணவர்கள் நலன் கருதியே தேர்வு ரத்து செய்யப்பட்டதாக தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தற்போது கொரோனா சூழல் மாறி உள்ளதால் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பல்கலைக்கழகங்கள் தேர்வுகளை நடத்த முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.