Categories
சினிமா தமிழ் சினிமா

மொத்தமும் எங்களுக்கே ”மாஸ் காட்டும் பிகில்” தயாரிப்பாளர் காத்திருப்பு….!!

பிகில் படத்திற்கு அதிக திரையரங்குகளை பிடிப்பதற்கு படத்தின் தயாரிப்பாளர் காத்திருக்கின்றனர்.

அட்லீ- விஜய் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்திருக்கும் திரைப்படம் பிகில். எதிர்வரும் தீபாவளி தினத்தில் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு மத்தியில் வெளிவர இருக்கிறது. நயன்தாரா நாயகியாக நடித்துள்ள இந்த திரைப்படம் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகியிருக்கின்றது. ரகுமான் இசையில் இந்த படத்தில் இரண்டு பாடல்கள் இதுவரை வெளியிடப்பட்டது. இந்த இரண்டு பாடல்களும் இரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றது.

இந்த திரைப்படத்தில் முதலில் வெளியாகிய சிங்கப் பெண்ணே பாடல் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதோடு  எதிர்பார்த்த மாதிரியே வெற்றியை அடைந்துள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் பிகில் படத்தின் எதிர்பார்ப்பு  மேலும் அதிகரித்துள்ளது.இந்த திரைப்படத்திற்கு பெண்களுக்கான கூட்டத்தையும் அதிகரிக்கும் என்று படக்குழுவு கருது கின்றது.சிங்கப் பெண்ணே பாடலை தொடர்ந்து வெளியான வெறித்தனம் பாடல் புதிய சாதனை படைத்துள்ளது. ஏ ஆர் ரகுமானின் இசையில் விஜய் பாடிய இந்தப் பாடல் விஜய் ரசிகர்களுக்கு சிறப்பான விருந்தாக அமைந்துள்ளது.

சென்னை வட்டார மொழியில் ரசிகர்களுக்கு குதூகலம் ஊட்டும் வகையில் அமைந்திருக்கும் இந்த பாடல் மொபைல் போன் அப்ளிகேஷனை முழுமையாக ஆக்ரமித்து இந்த பாடலுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் மூலமாக இந்தப் பாடல் குழந்தைகள் மத்தியிலும் சென்றடைந்தது படக்குழுவை மேலும் உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இந்த நிலையில் படத்தின் மீதி பாடல்களை வரக்கூடிய 19ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

மேலும் பிகில் படத்தின் டிரெய்லரும் இந்த நாளில் வெளியாவதால் இந்த ட்ரைலரை எதிர்பார்த்து காத்திருக்கின்ற  நிலையில் படத்தயாரிப்பு நிறுவனம் பிகில் திரைப்படத்திற்கு அதிகப்படியான திரையரங்க பிடிக்கக்கூடிய முயற்சியில் இறங்கி இருக்கின்றது. திரைப்படத்தின் வர்த்தகமும் ஏறத்தாழ நிறைவடைந்த நிலையில் இந்த திரைப்படத்தை அதிகப்படியான திரையரங்கில் வெளியிடும் எண்ணத்தில் தொடர்ந்து பட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு வருகின்றது.

இது வரைக்கும் நடிகர் விஜய்திரைப்படம் வெளியாகாத எண்ணிக்கையில் அதிக திரையரங்குகளில் பிகில் திரைப்படம் வெளியாகும் என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது.விஜய்சசேதுபத்தியின் சங்கத்தமிழன் மற்றும் கார்த்தி நடித்த கைதி திரைப்படமும் பிகில் வெளியாகும் நாளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் சங்க தமிழன்  வெளியாவது உறுதியாகத நிலையில் கார்த்தி நடிப்பில் வெளியாகும் படம் கைதி படம் மட்டுமே வெளியாக இருப்பதனால் பிகில் படத்திற்கு அதிகப்படியான திரையரங்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஏஜிஎஸ் நிறுவனம் உள்ளது.

Categories

Tech |