Categories
மாநில செய்திகள்

அனைத்து தொழிலாளர்களுக்கும் ரூ.2000 … சிறப்பு உணவு தொகுப்பு… எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தல்…!!

அனைத்து தொழிலாளர்களுக்கும் ரூ. 2000 பணமும், சிறப்பு உணவு தொகுப்பும் வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரம் எடுத்து வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை ஊரடங்கு என்ற அறிவிப்பையும் வெளியிடப்பட்டுள்ளது. மக்களின் நிலைமையை கருத்தில் கொண்டு முதல்வராக பதவியேற்றவுடன் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். கொரோனா நிவாரண நிதியாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு தற்போது 2000 ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இந்த ஊரடங்கு காலகட்டத்தில் தொழிலாளர்கள் வேலைக்குச் செல்லாமல் வருமானமின்றி தவித்து வருகின்றன. ஆகையால் பதிவு பெற்ற மற்றும் பதிவு பெறாத தொழிலாளர்கள் அனைவருக்கும் நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிச்சாமி முதல்வரை வலியுறுத்தியுள்ளார். அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் நிவாரண உதவித்தொகை ரூபாய் 2 ஆயிரம் மற்றும் சிறப்பு உணவு தொகுப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |