நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே இருக்கும் அருவங்காடு தொழிற்சாலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் கொரோனா தொற்று காலத்தில், தங்களின் பாதுகாப்பு குறித்து பல்வேறு கோரிக்கைகளை ஆலை நிர்வாகத்திடம் முன் வைத்துள்ளனர்.
இதுகுறித்த பேச்சுவார்த்தைக்கு அங்கீகரிக்கப்பட்ட 3 தொழிற்சங்கங்களை ஆலை நிர்வாகம் அழைத்துள்ளது. அப்போது, ஆலையின் பொதுமேலாளர், தொழிலாளர்களை பார்த்து அனைவரும் ஆங்கிலம் அல்லது இந்தியில் பேசுமாறும், தமிழில் யாராவது பேசினால் நான் எழுந்து வெளியே போய் விடுவேன் என்றும் மிகவும் காட்டமாக தெரிவித்துள்ளார்.
வெடி மருந்து தொழிற்சாலை முதன்மை மேலாளர் மன்னிப்பு கேட்கும் வரையிலும் அனைத்து தொழிற்சங்கங்கள், குன்னூரிலுள்ள மற்ற அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளுடன் இணைந்து போராட்டம் நடத்துவோம் என்று தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.