Categories
அரசியல் மாநில செய்திகள்

வாக்கு வங்கி குறையவில்லை “உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி” பிரேமலதா உறுதி…!!

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக_உடனான கூட்டணி தொடருமென்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக , பாமக , தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருந்தன. ஆனால் இந்த கூட்டணி படு தோல்வி அடைந்தது. அதிமுக கூட்டணி சார்பில் தேனியில் போட்டியிட்ட துணை முதலவர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் மட்டும் வெற்றி பெற்றார். 4 தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக_வும் பெரிதாக வாக்கு வாங்கவில்லை. கடந்த தேர்தல்களை ஒப்பிட்டு பார்த்தல் தேமுதிகவின் வாக்கு வாங்கி அதிகளவில் குறைந்தது.

Image result for பிரேமலதா

இந்நிலையில் தேர்தலுக்கு பின் செய்தியாளர்களை இன்று தேமுதிக_வின் பொருளாளர் பிரேமலதா சந்தித்தார்.அப்போது தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனை என பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அவர் , தமிழகத்தில் நடைபெற்ற தேர்தல் மூலம் எவ்வித பெரிய மாற்றமும்  ஏற்படவில்லை. வாக்கு வங்கிகள் எதுவும் குறையவில்லை. 40 தொகுதியில்  போட்டியிடுவதையும் 4 தொகுதிகளில் போட்டியிட்டதையும் ஒப்பிடக்கூடாது. வருகின்ற  உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக உடனான எண்களின் கூட்டணி தொடரும் என்று தெரிவித்தார்.

Categories

Tech |