தென்மேற்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட கர்நாடகா , பீகார் மாநிலங்களுக்கு வெள்ள நிவாரண நிதியாக 1,813 கோடி ரூபாய் வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் 6_ஆம் தேதி கேரளாவில் தொடங்கி நான்கு மாதங்களாக நாடு முழுவதும் கொட்டித் தீர்த்தது. கடந்த 58 ஆண்டுகளுக்கு பிறகு வரலாறு காணாத வகையில் சராசரியாக 88 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. கன மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு மேற்கொள்ள வேண்டிய நிவாரணப் பணிகள் குறித்து மத்திய அரசு ஆய்வு செய்து வந்தது.
இதற்கிடையே கர்நாடக மற்றும் பீகார் மாநிலங்களில் நிவாரண நிதி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கர்நாடகாவிற்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ 1, 200 கோடி ரூபாயையும் , பீகார் மாநிலத்திற்கு ரூ 6,13 கோடி ரூபாய் என இரு மாநிலங்களுக்கும் சேர்த்து 1, 813 கோடி ரூபாய் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.