மாநகராட்சி பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச காலை உணவு வழங்கும் திட்டத்திற்காக இன்று சென்னையில் பூமிபூஜை நடைபெற்றது.
மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்திற்காக அட்சய பாத்திரம் சமையலறையை கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள மண்டபம் ஒன்றில் வைத்து நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன், போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த திட்டத்தின் மூலம் மாநகராட்சிகளில் உள்ள குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கி அவர்களது பசியை தீர்க்க முடியும். இதற்காக தமிழக ஆளுநர் பன்வாரிலால் ரூபாய் 5 கோடி ஒதுக்கி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடித்துள்ளார். அதன்படி 35 மாநகராட்சி பள்ளிக்கூடங்களில் உள்ள 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இத்திட்டத்தின் மூலம் காலை உணவைப் பெற்று பயன் அடைவர் என்று கூறப்படுகிறது. இத்திட்டம் தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.