Swiggy , Zomato , Uber Eats உணவு விநியோக நிறுவனங்கள் செயல்பட முதல்வர் அனுமதி வழங்கியுள்ளார்.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஏப்ரல் 14ஆம் தேதி முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் பல்வேறு மாநிலத்தில் பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவுகளை மீறுவதாகவும், வெளியே தேவையில்லாமல் சுற்றி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன.
இதே நிலைதான் தமிழகத்திலும் நீடித்தது.ஆங்காங்கே போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்தாலும் இந்த நிலை நீடித்து வந்த நிலையில் தேவையில்லாமல் மக்கள் கூடுவதை தவிர்ப்பதற்காக பல்வேறு நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் அத்தியாவசிய கடைகள் முழு நேரமும் செயல்படலாம் என அறிவித்திருந்த நிலையில் தற்போது காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார் . Swiggy , Zomato , Uber , Eats உணவு விநியோக நிறுவனங்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு செயல்பட அனுமதி வழங்கப்ட்டது.
மேலும் காலை 7 மணி முதல் 9 மணி வரை மதியம் 12 மணி முதல் 2 30 மணி வரை மாலை 6 மணி முதல் 9 மணி வரை இயங்கலாம். உணவு விநியோகத்தில் ஈடுபடுவோர் காவல்துறையிடம் அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள வேண்டும். உணவு வினியோகிக்கும் நிறுவனங்களே பணியாளர்கள் உடல் நிலையை பரிசோதித்து பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.