டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றதில் மேல்முறையீடு வழக்கு விசாரணை நிறைவு பெற்றது.
கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மத்திய அரசு ஊரடங்கு கட்டுப்பாட்டில் பல்வேறு தளர்வுகளை கொண்டு வந்தது. அதன் ஒரு பகுதியாக மாநிலங்கள் முழுவதும் மதுக்கடைகளை திறந்து கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்த நிலையில் தமிழக அரசு டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க உத்தரவிட்டது.
கடந்த 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் டாஸ்மாக் கடைகள் திறக்கப் பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகள் மீறப்பட்டுள்ளதாகவும், சமூக விலகல் முறையாக கடைபிடிக்கவில்லை என்று மனுதாக்கல் செய்யப்பட்டு டாஸ்மார்க் மதுக்கடைகளை மூட உத்தரவிட சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்க்கு தொடரப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் ஊரடங்கு முடியும் வரை மூட உத்தரவிட்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் மேல்முறையீட்டு மூலமாக தமிழக அரசு மதுக்கடைகளை திறக்க உறுதியாக உள்ளது. இந்த வழக்கின் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் வாதம் பிரதி வாதங்களை கேட்கப்பட்ட பின்பு வழக்கின் விசாரணை நிறைவு பெற்றது. இதில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி வழங்கி உள்ளது.
Appeal by Tamil Nadu Govt challenging Madras High Court's order directing to close all TASMAC liquor shops and only online sale of liquor in the state during COVID19 lockdown: Supreme Court stayed the Madras High Court order. Additional conditions also stayed. pic.twitter.com/zw4aPldody
— ANI (@ANI) May 15, 2020