நீட் தேர்வு கொடூரத்தை இனியும் தொடர அனுமதிப்பதா என்று திமுக.தலைவர் முக.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் சென்னையை சேர்ந்த மருத்துவரின் மகன் உதித்சூர்யா மஹாராஷ்டிராவில் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று தேனி அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து , தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் தனது ட்வீட்_டர் பக்கத்தில் , +2 பொதுத்தேர்வில் உரிய மதிப்பெண் பெற்ற அனிதாக்களின் உயிரைப் பறித்து, ஆள்மாறாட்டம் செய்த உதித்சூரியாக்களுக்கு MBBS சீட் வழங்கும் #NEET கொடூரத்தை இனியும் தொடர அனுமதிப்பதா? மத்திய அரசின் மாணவர் விரோதப் போக்கையும் அதற்குத் துணைபோகும் அடிமை அதிமுக அரசையும் அம்பலப்படுத்துவோம் என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
+2 பொதுத்தேர்வில் உரிய மதிப்பெண் பெற்ற அனிதாக்களின் உயிரைப் பறித்து, ஆள்மாறாட்டம் செய்த உதித்சூரியாக்களுக்கு MBBS சீட் வழங்கும் #NEET கொடூரத்தை இனியும் தொடர அனுமதிப்பதா?
மத்திய அரசின் மாணவர் விரோதப் போக்கையும் அதற்குத் துணைபோகும் அடிமை அதிமுக அரசையும் அம்பலப்படுத்துவோம்! https://t.co/hcrHWZvPMu
— M.K.Stalin (@mkstalin) September 19, 2019