2016 ஆம் ஆண்டு படிப்பை முடித்து செப்டம்பர் 9ஆம் தேதிக்கு முன் சட்ட பட்டம் பெற்றவர்களுக்கு சிவில் நீதிபதி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் 176 சிவில் நீதிபதிகள் பதவிக்கான எழுத்துத் தேர்வு நவம்பர் 21ம் தேதி நடைபெற உள்ள நிலையில் 2016-ம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதிக்கு பிறகு சட்ட பட்டத்தை பெற்றவர்கள் இந்தத் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பத்மாவதி லட்சுமி சண்முகப்பிரியா உள்ளிட்ட பலர், சென்னை உயர்நீதிமன்றத்தில் இதற்கு எதிராக வழக்கு தொடுத்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் 2016 ஆம் ஆண்டு சட்டப் படிப்பை முடித்து செப்டம்பர் 9ஆம் தேதிக்கு முன்பு சான்றிதழ் பெற்றவர்களும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அனுமதி அளித்தனர். மேலும் அரசு பணியாளர் தேர்வாணையம் குறிப்பிட்டுள்ள வயது வரம்பை தளர்த்த முடியாது எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.