திருப்பதியில் ஊரடங்கு தளர்வுக்கு பிறகு முதல் முறையாக 50 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள திருப்பதியில் ஊரடங்கு தளர்வு பின்னர் முதலில் 33 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்பின் படிப்படியாக அதிகளவு பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் திருப்பதியில் இலவச தரிசனத்தில் 20 ஆயிரம் பக்தர்கள், 300 ரூபாய் கட்டணத்தில் 20 ஆயிரம் பக்தர்கள், வி.ஐ.பி தரிசனம் மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் வி.ஐ.பி பிரேக் டிக்கெட் பெற்ற பக்தர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் என 10 ஆயிரம் பக்தர்கள் வரை சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
இதனால் சுமார் 40 ஆயிரம் பக்தர்கள் மட்டும்தான் ஊரடங்கு தளர்வுக்கு பிறகு திருப்பதியில் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் முதன்முறையாக 50 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு காலை 3 மணி முதல் இரவு 11 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய கூட்டம் கூட்டமாக அலை மோதுகின்றனர்.