Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் சின்னத்திரை படப்பிடிப்புகளை நிபந்தனைகளுடன் நடத்த அனுமதி – முதல்வர் உத்தரவு!

தமிழகத்தில் சின்னத்திரை படப்பிடிப்புகளை நிபந்தனைகளுடன் நடத்த அனுமதி அளித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

நாடு முழுவதும் 4ம் கட்டமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு வழங்கியுள்ளது. மேலும் பச்சை,ஆரஞ்சு, சிவப்பு மண்டலங்களை அந்தந்த மாநில அரசுகள் தீர்மானித்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதன்படி தமிழகத்தில் ஏற்கனவே ஊரடங்கில் சில கட்டுப்பாடு தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில், சின்னத்திரை படப்பிடிப்புகளை நிபந்தனைகளுடன் நடத்த முதல்வர் பழனிசாமி அனுமதி அளித்துள்ளார். படப்பிடிப்புகள் நடத்த அனுமதி கோரி சின்னத்திரை சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.எனினும் கீழ்காணும் நிபந்தனைகளுடன் படப்பிடிப்புகள் நடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது., அவை,

  • படப்பிடிப்புக்கு மாநகராட்சி அல்லது ஆணையர் அனுமதி பெற வேண்டும்
  • நடிகர்கள், கலைஞர்கள் என 20 நபர்களுக்கு மிகாமல் படப்பிடிப்பு நடத்தலாம்
  • சுற்றுச்சுவர் உள்ள வீடு அரங்கத்திற்குள் மட்டுமே படப்பிடிப்பிடிப்புகளை நடத்த வேண்டும். தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு இது பொருந்தாது என கூறப்பட்டுள்ளது
  • சின்னத்திரை படப்பிடிப்புகளின் போது கண்டிப்பாக பார்வையாளர்களை அனுமதிக்க கூடாது
  • படப்பிடிபிடிப்பு நடத்தும் அரங்கம் அல்லது வீட்டினை படப்பிடிப்பிற்கு பின்னரும் , முன்பும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்
  • ஊரக பகுதிகளில் (தடை செய்யப்பட்ட பகுதிகளை தவிர) பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்த தடை ஏதும் இல்லை
  • சளி, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறி உள்ளவர்களை படப்பிடிப்பு தளத்திற்குள் அனுமதிக்க கூடாது
  • படப்பிடிப்பில் பங்கேற்கும் நடிகர், நடிகைகள் தவிர தொழில்நுட்ப கலைஞர்கள் முக கவசம் அணிய வேண்டும்
  • படப்பிடிப்பிற்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள், சாதனங்கள் கிருமி நாசினி மூலம் சுத்தப்படுத்த வேண்டும்
  • படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் அவ்வப்போது சோப் அல்லது கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |