பிரபல நடிகர் அல்லு அர்ஜுன் தனது குடும்பத்தினருடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் அல்லு அர்ஜுன் தற்போது புஷ்பா எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா, பிரபல நடிகர் பஹத் பாசில் ஆகியோரும் நடித்து வருகின்றனர். இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இப்படத்தின் முதல் பாகம் வரும் டிசம்பர் 17ஆம் தேதி அன்று ரிலீசாக உள்ளது.
இதற்கிடையில் நடிகர் அல்லு அர்ஜுன் படப்பிடிப்பின்போது எப்போது ஓய்வு கிடைத்தாலும் தனது குடும்பத்தினருடன் சுற்றுலா செய்வதை வழக்கமாகக் கொண்டவர். அதன்படி அவர் தற்போதும் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு ரிலாக்ஸ் செய்து விட்டு ஹைதராபாத் திரும்பியவுடன் அவர் புஷ்பா படத்தின் மீதமுள்ள மூன்று பாடல் காட்சிகளிலும் நடிக்க இருக்கிறார் என்றும் தெரிய வந்துள்ளது.