மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக அ.தி.மு.க நிர்வாகி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள மண்ணுளி கிராமத்தில் அ.தி.மு.க கிளை செயலாளரான தியாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் தியாகராஜன் 27 வயதான மாற்றுத்திறனாளி பெண்ணுடன் நெருக்கமாக பழகியுள்ளார். மேலும் அந்த மாற்றுத்திறனாளி பெண்ணை தியாகராஜன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து அறிந்ததும் அந்த பெண்ணின் சகோதரர் கயர்லாபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் உறவினர் ஒருவரின் வீட்டில் தலைமறைவாக இருந்த தியாகராஜனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.