விஷ வண்டுகள் கடித்ததால் மாற்றுத்திறனாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள செட்டிபாளையம் பகுதியில் இருக்கும் பூங்காவை சீரமைக்கும் பணியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 71 பணியாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் இருந்த வேப்ப மரத்தில் கூடு கட்டியிருந்த விஷ வண்டுகள் இந்த பணியாளர்களை துரத்தி சென்று கடித்துள்ளன. இதனையடுத்து மாற்றுத்திறனாளியான கார்த்தி என்பவர் ஓட முடியாமல் இருந்ததால் விஷ வண்டுகள் அவரை சூழ்ந்து கடித்துள்ளது.
இதனால் மயங்கி விழுந்த கார்த்திக்கை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இதற்கிடையில் தீயணைப்பு வீரர்கள் தீ வைத்து விஷ வண்டுகள் மற்றும் அதன் கூடுகளை அழித்துவிட்டனர். இதனை அடுத்து சிகிச்சை பலனின்றி கார்த்திக் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை தொடர்ந்து விஷ வண்டுகள் கடித்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 20 பேரையும் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.