Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மனநலம் பாதித்த சிறுவனுக்கு நடந்த சோகம்…. கதறி அழுத தாய்…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்….!!

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஏ.பி.டி கம்பம் பகுதியில் சுகன்யா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனநலம் பாதிக்கப்பட்ட யோக பாலகுமாரன் என்ற 14 வயது மகன் உள்ளார். இவர் மனநலம் பாதிக்கப்பட்டோர் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு வீட்டை விட்டு வெளியே சென்ற யோக பாலகுமாரன் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் சுகன்யா அவரை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளார். இதற்கிடையில் விருதுநகர் சிவகாசி சாலையில் உள்ள சாய்பாபா கோவில் அருகே யோக பாலகுமரன் சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் யோக பாலகுமாரன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக சுகன்யாவிற்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து மருத்துவமனைக்கு விரைந்து சென்ற சுகன்யா தனது மகனின் உடலை பார்த்து கதறி அழுத சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. மேலும் இதுகுறித்து சுகன்யா அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |