Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மனநலம் பாதிக்கப்பட்டவர்… வீட்டிற்கு திரும்பும் போது நடந்த விபரீதம்… பெண்ணுக்கு நேர்ந்த துயரம்…!!

ரோட்டில் நடந்து சென்ற இளம்பெண் மீது வாகனம் மோதி விபத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கல்குளம் புதிய தெருவில் ஜெகநாதன் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு மகள் உள்ளார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இந்நிலையில் கலைச்செல்வி தனது வீட்டிலிருந்து புறப்பட்டு கூவத்தூர் கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் அங்கிருந்து கடலூர்-மதுராந்தகம் சாலையில் நடந்து தனது வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது அவர் கண்டிகை பெட்ரோல் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று கலைச்செல்வியின் மீது மோதியது. இதனால் பலத்த காயமடைந்த கலைச்செல்வி உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |