Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இன்னும் கல்யாணம் ஆகல… மாற்றுத்திறனாளி பெண்ணின் முடிவு… நேர்ந்த துயர சம்பவம்…!!

திருமணமாகாத விரக்தியில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள சூளைமேடு பகுதியில் சம்பந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புஷ்பாவதி என்ற ஒரு மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மாற்றுத்திறனாளியான யசோதா என்ற ஒரு மகள் உள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் நடைபெறாத காரணத்தால் எப்போதும் சோகமாகவே இருந்துள்ளார். இந்நிலையில் யசோதாவின் அறையில் திடீரென அலறல் சத்தம் கேட்டு அவரது பெற்றோர்கள் அங்கு சென்று பார்த்தபோது யசோதா உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.

இதையடுத்து அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் யசோதா பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சூளைமேடு போலீசார் திருமணமாகாத விரக்தியில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |