ரேஷன் கடையில் கொள்ளையடித்து சென்ற மாற்றுத்திறனாளி குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள சைதாப்பேட்டை பகுதியில் இருக்கும் ரேஷன் கடையில் நிவாரண நிதி 7.36 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வந்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது அதில் ரேஷன் கடையில் திருடிச்சென்ற குற்றவாளியின் உருவம் பதிவாகி இருந்தது.
இதனையடுத்து காவல்துறையினர் குற்றவாளியான கோபி என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் இவருக்கு காது கேட்காமலும், வாய் பேச முடியாமலும் இருப்பதால் இவரை ஊமை கோபி என்று அழைத்து வருவது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இவர் மீது ஏற்கனவே ஏராளமான திருட்டு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றது. இதனையடுத்து காவல்துறையினர் அவரிடம் இருந்த 4.45 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர்.