Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இது எங்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும்…. தேசிய கொடி ஏற்றி வைத்த திருநங்கை…. திருச்சியில் நெகிழ்ச்சி சம்பவம்…!!

தேசிய கொடியை ஏற்றி வைத்த திருநங்கை தலைவர்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள தென்னூரில் சுப்பையா நினைவு நடுநிலைப் பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜீவானந்தன் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து திருச்சி மாவட்ட திட்ட அலுவலகத்தில் ஊரக வாழ்வாதார இயக்கத்தின் தற்காலிக வாகன ஓட்டுநராக பணிபுரியும் திருநங்கை சினேகா தலைவர்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளார். அதன் பின்னர் தேசிய கொடியை ஏற்றி வைத்த சினேகா அதற்கு மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியின்போது, திருநங்கை சினேகா பேசிய போது, ஆசிரியர்கள் தான் நம் அனைவருக்கும் முன்னுதாரணமாக விளங்குபவர்கள் என்றும், நாம் கொண்ட லட்சியத்தில் உறுதியாக செயல்பட்டால் வாழ்க்கையில் முன்னேறலாம் என்றும் கூறியுள்ளார். மேலும் எங்களைப்போல இருப்பவர்களுக்கு இம்மாதிரியான வாய்ப்பு கிடைப்பது, நாங்கள் வாழ்க்கையில் தன்னம்பிக்கையுடன் அடுத்த இடத்திற்கு செல்ல இது உதவியாக இருக்கும் என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.

Categories

Tech |