Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அழுகிய நிலையில் கிடந்த பெண் சடலம்… வெளியான திடுக்கிடும் தகவல்…!!!

சிதம்பரம் அருகே உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் அழுகிய நிலையில் பெண் சடலம் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிதம்பரம் அடுத்த புவனகிரி கடை வீதியில் ஒரு தனியார் நிதி நிறுவனம் உள்ளது. அதன் காவலாளி செந்தில்குமார் நிறுவனத்தைத் திறப்பதற்காக நேற்று காலை வந்தார். அப்போது நிறுவனத்தில் இருந்து துர்நாற்றம் வீசியது. அதனால் சந்தேகமடைந்த அவர் உடனடியாக அந்த நிறுவன அதிகாரிகளுக்கும்,போலீசாருக்கும் தகவல் அளித்தார். தகவலின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக், புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டிசெல்வி மற்றும் சில போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.பின்பு அந்த இடத்தை சோதனையிட்டனர்.

சோதனையில் அங்குள்ள மாடிப் பகுதியில் நிர்வாணமாக ஒரு பெண்ணின் பிணம் அழுகிய நிலையில் இருந்தது. அதன்பின் போலீசார் விசாரணை நடத்தினர். அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது அப்பெண் புதுச்சேரி பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அதன்பின் போலீசார் அப்பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நிதி நிறுவனத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் சோதனை செய்தனர். அதில் அருகில் உள்ள தனியார் கணினி மையத்தில் பணியாற்றும் முரசொலி மாறன் என்பவர் ஒரு பெண்ணுடன் மாடிப்படி ஏறி செல்லும் காட்சி இரவு 7 மணிக்கு பதிவாகியுள்ளது. ஆனால் இரவு 10 மணி அளவில் முரசொலி மாறன் மட்டும் தனியாக கீழே இறங்கி வந்த காட்சி பதிவாகியுள்ளது. இதனால் போலீசார் முரசொலி மாறன் மீது சந்தேகம் அடைந்தனர். உடனடியாக போலீசார் முரசொலி மாறனை விசாரிக்க சென்ற போது அவர் ஏற்கனவே தலைமறைவாகி அது தெரிய வந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த பெண்ணை முரசொலிமாறன் கற்பழித்து கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா?என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள முரசொலி மாறனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |