Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“பெற்றோர் சொல் கேளுங்கள்” மாணவிகளுக்கு விழிப்புணர்வு…. சிறப்பாக நடைபெற்ற கூட்டம்….!!

பெற்றோர் சொல் கேட்டு நடக்க வேண்டும் என பள்ளி மாணவிகளுக்கு கலெக்டர் கூறியுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அலுவலக கூட்ட அரங்கத்தில் வைத்து மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் இம்மாவட்ட கலெக்டரான பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கியுள்ளார். இந்தக் கூட்டத்தில் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, பொதுப்பிரச்சினைகள், மின்சாரத் துறை சார்பான குறைகள், இலவச வீட்டு மனை பட்டா, நிலப்பட்டா குறைகள், கூட்டுறவு கடன் உதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பாக வீடுகள், வேலைவாய்ப்பு மற்றும் குடிநீர் வசதி உள்ளிட்ட பல கோரிக்கைகளை அடங்கிய மனுக்களை பொதுமக்கள் அளித்துள்ளனர்.

இவற்றில் மொத்தமாக 271 மனுக்கள் பெறப்பட்டு இருக்கிறது. இவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு மாணவிகளுக்கு அன்பு மடல் வழங்கியும், விழிப்புணர்வு சைல்டு லைன் 1098 என்ற பலகையையும் கலெக்டர் வெளியிட்டுள்ளார். பின்னர் மாணவிகள் சைல்டு லைன் பட்டையை கலெக்டருக்கு அணிவித்துள்ளனர்.

அப்போது கலெக்டர் கூறியதாவது, நீங்கள் நல்ல முறையில் பயில வேண்டும். சிறு வயதில் கல்யாணம் செய்து கொள்வது மிகவும் தவறான செயல். எந்த ஒரு மனிதரின் வெளிப்புற தோற்றத்தை வைத்து அவர்களை குறைத்து மதிப்பிடக்கூடாது. அதிக வாய்ப்புகள் இருக்கிறது. இதை மாணவிகள் தெரிந்து கொள்ள வேண்டும். நாம் மட்டும் முன்னேற வேண்டும் என நினைக்காமல் நம்மை சுற்றி இருப்பவர்களும் முன்னேற வேண்டும் என நினைக்க வேண்டும். அம்மா தான் முதல் நண்பன். பெற்றோர் என்ன சொல்கிறார்களோ அதை கடைப்பிடித்து நடக்க வேண்டும் என கலெக்டர் கூறியுள்ளார்.

Categories

Tech |