Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

எங்களுக்கு வேண்டும்…. தொழிலாளர்கள் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….!!

அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்களிடம் அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் தீவிர பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அவர்கள் தபால்களின் மூலமாக வாக்களிக்க விண்ணப்பங்களை தேர்தலுக்கு முன்பாக தரப்படவில்லை என கூறப்படுகிறது. ஆனால் தேர்தல் முடிந்த நிலையில் தபால் வாக்கு படிவங்களை ஏற்க வலியுறுத்த 50-க்கும் அதிகமானவர்கள் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் அலுவலர் வெங்கடாசலம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து அவர்கள் கலெக்டரிடம் இது தொடர்பாக தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர். இதனைக் கேட்ட பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

Categories

Tech |