Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வீட்டிற்குள் புகுந்த தண்ணீர்…. காலம் தாழ்த்தி வரும் நிர்வாகம்…. பொதுமக்கள் ஆர்பாட்டம்….!!

வீட்டிற்குள் புகுந்த தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மேலபுலம்புதூர் ஊராட்சியில் இருக்கும் எம்.ஜி.ஆர் நகர் மற்றும் மேட்டு தெரு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் கசக்கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீட்டுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கிறது. இது பற்றி பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.

இதனால் கோபம் அடைந்த பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்ததும் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அரசு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர். ஆதலால் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

Categories

Tech |