Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நகையை மீட்க சென்ற பொதுமக்கள்…. செயலாளர் பணியிடை நீக்கம்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

நகை மீட்க சென்ற பொதுமக்கள் கூட்டுறவு சங்கம் அலுவலகத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கிராமப்புறங்களில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தங்களுடைய தங்க நகைகளை அடகு வைத்து இருந்திருக்கின்றனர். இதில் பொதுமக்கள் சிலர் அடகு வைத்திருந்த நகைகளை வடிகட்டி மீட்பதற்காக கடந்த சில வாரங்களுக்கு முன்பாக சென்றுள்ளனர். அப்போது அவர்களிடம் அடகு வைத்து இருந்த நகைகள் அனைத்தும் ஏலம் விடப்பட்டதாக பணியில் இருந்த செயலாளர் திருநாராயணன் தெரிவித்துள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் முறையான முன்னறிவிப்பின்றி நகைகள் ஏலம் விடப்பட்டதால் கூட்டுறவு சங்க செயலாளர் திருநாராயணனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக தகவல் அறிந்த கிராம மக்கள் 100-க்கும் அதிகமானவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அவர்களிடம் கூட்டுறவு சங்க கள அலுவலர் கமலக்கண்ணன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

இதனையடுத்து நகைகள் ஏலம் விடப்பட்டது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் எந்த விதமான முறையான அறிவிப்பும் இல்லாமல் நகைகளை ஏலம் விட்டது அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. இதனால் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளரான திருநாராயணனை பணியிடை நீக்கம் செய்து கூட்டுறவு சங்க இணை பதிவாளர் பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |