இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்துக்குள் புகுந்த பாம்பை தீயணைப்புத்துறையினர் பிடித்து வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானியில் பிரசித்தி பெற்ற சங்கமேஸ்வரர் கோவில் இருக்கின்றது. இந்த கோவிலுக்குள் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு பாம்பு ஒன்று நுழைந்து விட்டது. இதனால் அலுவலகத்துக்குள் இருந்த பணியாளர்கள் அடித்து பிடித்து ஓடினர்.
இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 6 அடி உள்ள சாரை பாம்பை லாவகமாக பிடித்தனர். இதனையடுத்து தீயணைப்புத்துறை வீரர்கள் அந்த பாம்பை ஒரு சாக்குப்பையில் போட்டு அருகில் உள்ள வனப்பகுதிக்கு கொண்டு விட்டனர்.