தேர்தல் நடத்தும் அலுவலரை தாக்கிய வழக்கில் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 11வது வார்டு உறுப்பினர் பதவிக்கு அ.தி.மு.க சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சலேத்மேரியின் வேட்புமனுவை வாபஸ் பெற்றுக் கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின் இது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சாமிதுரையை தாக்கிய காரணத்தால் அ.தி.மு.க பிரமுகர் உள்பட சிலர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரை தாக்கிய வழக்கில் சலேத்மேரியின் மகன் ஆரோக்கியதாஸ் மற்றும் கணவர் அந்தோணிசாமி ஆகிய இரண்டு பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.