இருசக்கர வாகனத்தை மர்ம நபர் திருடும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி புதுத் தெருவில் காமராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வட்டார வளர்ச்சி அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் காமராஜ் தனது வீட்டின் முன்பாக இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு உள்ளே சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் காமராஜர் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றுள்ளார்.
இந்தக் காட்சியானது அப்பகுதியில் இருக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்துள்ளது. இது பற்றி காமராஜ் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இருசக்கர வாகனத்தை மர்ம நபர் ஒருவர் திருடிச் செல்லும் காட்சியானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.