Categories
கரூர் மாவட்ட செய்திகள்

5 அம்சக் கோரிக்கைகள்…. நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம்…. கரூரில் பரபரப்பு….!!

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அலுவலர்கள் சங்கம் சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

கரூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வருவாய்த் துறை நேரடி நியமன அலுவலர்கள் சங்கம் சார்பாக கலெக்டர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கியுள்ளார். இதற்கு வட்டாட்சியர்கள் சிவகுமார், மகுடீஸ்வரன் மற்றும் மாவட்ட செயலாளர் சண்முக பிரகாசம் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதன்பின் ஆர்ப்பாட்டம் தொடர்பாக சமூக நிர்வாகிகள் கூறியதாவது, நேரடி நியமன உதவியாளருக்கு அமைச்சுப் பணி சிறப்பு விதிப்படி வருவாய் ஆய்வாளர் பயிற்சி உள்ளிட்ட அனைத்து பயிற்சிகளையும் 5 ஆண்டுகளுக்குள் முறையாக வழங்க வேண்டும் எனவும், ஐந்து ஆண்டுகள் பயிற்சி முடித்து நேரடி நியமன உதவியாளருக்கு பயிற்சி முடிவுற்ற உடன் பி.ஆர்.ஓ டிடி பெயர் மாற்றம் செய்து உயர்த்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.

பின்னர் 8.4.2009 முதல் துணை வட்டாட்சியர் பட்டியல்கள் மறுவரையறை செய்து அதனடிப்படையில் திருத்திய வட்டாட்சியர், துணை வட்டாட்சியர் பட்டியல் வெளியிடப்பட வேண்டும். பிறகு 2019 முதல் அனைத்து மாவட்டங்களிலும் தகுதியான நபர்களுக்கு துணை வட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் பதவி உயர்வு பட்டியலை வெளியிடுமாறும், அனைத்து சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் துணை வட்டாட்சியர் நிலையில் ஒரு பணியிடமும் மற்றும் அனைத்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் துணை வட்டாட்சியர் நிலையில் ஒரு பணியிடமும் புதிதாக உருவாக்க வேண்டும். இதனைத் தொடர்ந்து சி.பி.எஸ் ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டுமாறும், நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு அகவிலைப்படி உயர்வு நிலுவை வழங்க வேண்டும் என்பன உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |