தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு கலெக்டர் அலுவலகத்தில் வைத்து அனைத்துத் துறை அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் வைத்து தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதனையடுத்து சிறப்பாக பணிபுரிந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் 18 வயது பூர்த்தியான இளம்பெண் வாக்காளர்களுக்கு வண்ண வாக்காளர் அடையாள அட்டைகளை அவர் வழங்கி பேசியுள்ளார்.
பின்னர் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை கலெக்டர் தொடங்கி வைத்து மூன்றாம் பாலின வாக்காளர்களை கவுரவித்துள்ளார். இதே போல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் வைத்து முதன்மை கல்வி அலுவலர் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி எடுக்கப்பட்டுள்ளது.