Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

நிறைய முறை சொல்லியாச்சு…. வளாகத்தில் நூதன போராட்டம்…. வக்கீல்கள் கோரிக்கை….!!

நீதிமன்றம் வளாகத்தில் தேங்கி இருக்கின்ற மழைநீரை அகற்றுமாறு வக்கீல்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கச்சேரி சாலையில் அரசினர் தோட்ட வளாகத்தில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், நீதித்துறை நடுவர் நீதிமன்றம், வணிகவரி அலுவலகம், காவல் நிலையம், தாலுகா அலுவலகம், தாலுகா காவல் நிலையம், போக்குவரத்து காவல் நிலையம் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகியவை அமைந்திருக்கின்றது.

இந்நிலையில் தற்போது பெய்து வரும் கனமழையால் அனைத்து நிலையங்களிலும் மழைநீர் தேங்கி நிற்கின்றது. இதனால் தாலுகா அலுவலகம், காவல் நிலையம் மற்றும் நீதிமன்றங்களுக்கு செல்லும் வழக்கறிஞர் மற்றும் பொதுமக்கள் செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மழை நீரை அகற்ற கோரி பலமுறை நகராட்சி நிர்வாகத்திற்கும், பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும் வக்கீல்கள் கோரிக்கை விடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் அவர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது மழை நீரை அகற்ற கோரி தேங்கி இருக்கும் மழை நீரில் வக்கீல்கள் காகிதத்தில் கப்பல் விட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து வளாகம் மற்றும் காவல் நிலையங்களில் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்ற வடிகால் அமைத்து தருமாறு பொதுமக்கள் மற்றும் வக்கீல்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |