தனி வார்டை பொது வார்டாக மாற்ற கோரி அலுவலகம் முன்பாக பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டத்திலுள்ள பெரங்கியம் பகுதியில் 9-வார்டு பொதுவாக அமைந்திருக்கிறது. இந்நிலையில் 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலின் போது இப்பகுதி தனி வார்டாக மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. இதனை கண்டித்து உள்ளாட்சித் தேர்தலை வாக்காளர்கள் புறக்கணித்துள்ளனர். அதன்பின் போட்டியிட யாரும் வேட்புமனு தாக்கல் செய்ய வராத காரணத்தினால் ஒன்பதாவது வார்டு பொது வார்டாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இவற்றில் போட்டியிட தற்போது மூன்று பெண்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
அதனால் ஒன்பதாவது வார்டு பொது வார்டாக மாற்ற 2-வது முறையாக தேர்தலை புறக்கணிக்கப் போவதாக வாக்காளர்கள் அறிவித்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக ஒன்று திரண்டு தனி வார்டாக மாற்றப்பட்டதற்கு ஊராட்சி செயலாளர் பிரேம்குமார் தான் காரணம் என கூறி அவரை கண்டித்தும், பொது வார்டாக மாற்ற கோரியும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவர்கள் இரண்டாவது முறையாக தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கூறிய கோஷங்களை எழுப்பியுள்ளனர்.