ஏன் படம் நடிக்கவில்லை என்னும் கேள்விக்கு நான் சோம்பேறி ஆகிவிட்டேன் என பதிலளித்த நஸ்ரிய
மலையாளத்தில் வெளியான திரைப்படம் டிரான்ஸ். பகத் பாசில் மற்றும் நஸ்ரியா நடித்த இத்திரைப்படத்தின் விளம்பரத்திற்காக அழிக்கப்பட்ட பேட்டி ஒன்றில் நஸ்ரியாவிடம் திருமணத்திற்குப்பின் ஏன் திரையுலகில் இடைவெளி எனும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த நஸ்ரியா நான் சோம்பேறி ஆகி விட்டேன் வேறொன்றுமில்லை. இரண்டு வருடங்கள் இடைவெளி வேண்டும் என நான் தீர்மானிக்கவில்லை.
நான் கேட்கும் கதை என்னை ஆர்வம் கொள்ளச் செய்தால், நேரமும் பொருந்தி வந்தால், நான் இதை நடித்தே ஆகவேண்டும் என்ற எண்ணம் எனக்குத் தோன்றினாள் நிச்சயம் நடிப்பேன். நான் கதை கேட்கும் பொழுது ஆழமாக யோசிக்க மாட்டேன். கதை என்னை ஆர்வம் கொள்ள செய்யுமா அதுவே முக்கியம். அளவுக்கதிகமாக யோசிப்பதில்லை என பதிலளித்துள்ளார்.