செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மாநிலங்களுக்கு நிதி தருவேன் என சொல்கிறார் அல்லவா பிரதமர். உங்களுக்கு நிதி ஏது ? நான் கேக்குறதுக்கு பதில் சொல்லுங்க. நீங்க தான் நரேந்திர மோடி. உங்களுக்கும் ஏது நிதி ? மாநிலங்கள் கொடுக்கின்ற நிதிதான், இந்திய ஒன்றிய அரசின் நிதி. என்னுடைய காசை எடுத்து வச்சுக்கிட்டு, தர முடியாது, தர முடியாதுன்னு சொல்றீங்க.
நான் முதலமைச்சராக இருந்தால் நீங்க சொல்லுவீங்களா ? வரி கூடா இயக்கம், அடிமை இந்தியாவில் இல்ல. விடுதலைப் பெற்ற இந்தியாவில் நடக்கும்.”தர முடியாது வரி” முடிந்ததை பாருன்னா என்ன பண்ணி இருப்பீங்க ? என்ன பண்ணி இருப்பீங்க என்னை ? சும்மா ஏன் காசு எடுத்து வச்சுக்கிட்டு, நீ ஏன் கால்ல விழுந்தால் தான், காசு அப்படின்னா… வெட்டி துண்டா வீசி எறிஞ்சிடுவேன் காலுகளை எல்லாம் என கடுமையான வார்த்தைகளால் மத்திய அரசை விமர்சித்தார்.
மேலும் பேசிய அவர், 2 லட்சத்து 30,000 கோடி அதானிக்கு கடன் கொடுத்து இருக்கீங்க. நானா சொல்றேன், உலக நாடுகள் எல்லாம் சொல்லுது. உலக வங்கியே சொல்லுது. ஒரு வேலை, அதானி திவால் ஆயிட்டான் என்று வைத்து கொள்ளுங்கள், ”இந்தியா பிச்சை எடுக்கும்” அது என்ன சேட்டை ? நிதி தர முடியாது. ஒரு காலம் வருது, எல்லா அக்கிரமத்துக்கும் முடி கட்டுறதுக்கு ஒரு காலம் வர்றத்தானே செய்யும். இப்படியே போயிடாதில்ல என மத்திய அரசை எச்சரித்தார்.