70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு பிப்ரவரி 10ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இம்முறை ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவுவதால் அனைத்துக் கட்சியினரும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.
தேர்தல் பரப்புரையின் போது, பாஜக எம்.பி. பர்வேஷ் வெர்மா, முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை பயங்கரவாதி என விமர்சித்தார். இதற்கு மாநிலம் முழுவதும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் இதற்கு பதலடி கொடுத்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், “டெல்லி சட்டப்பேரவை தேர்தல் மூலம் மக்களுக்கு நான் மகனா? சகோதரானா? இல்லை பயங்கரவாதியா? என்பதை முடிவு செய்வார்கள்” எனப் பதிலடி கொடுத்துள்ளார்.