Categories
உலக செய்திகள்

60,000 அமெரிக்கர்கள் உயிரிழப்பர்….! ”எனக்கே வாக்களியுங்கள்” ட்ரம்பின் வாக்கு வேட்டை …!!

நாங்கள் தொற்றை சிறப்பாக கையாண்டது இறப்பு எண்ணிக்கையை  குறைந்துள்ளது அதனால் எனக்கே வாக்களியுங்கள் என டிரம்ப் கேட்டுள்ளார்

சீனாவில் வூஹான் நகரில் தொடங்கிய கொரோனா தொற்று அங்கு கட்டுப்படுத்தப்பட்டு விட்டாலும் உலக வல்லரசு நாடான அமெரிக்காவில் அதன் தாக்கம் அதிகமாகவே உள்ளது.கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அதிபர் எடுத்து வரும் நடவடிக்கைகள் அனைத்தும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றன. இந்நிலையில் வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அதிபரிடம் நிருபர் ஒருவர் “வியட்நாம் போரில் இறந்த வீரர்களை விட கடந்த ஆறு வாரத்தில் கொரோனா தொற்றினால் அதிக மக்களை இழந்துள்ளோம். அதனால் நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் மீண்டும் அதிபர் ஆக நீங்கள் தகுதியானவரா” என கேள்வி எழுப்பியுள்ளார்.

நிருபரின் கேள்விக்கு பதிலளித்த டிரம்ப் “அமெரிக்காவில் கொரோனாவிற்கு 22 லட்சம் மக்கள் உயிர் இழப்பார்கள் என கணிக்கப்பட்டது. ஆனால் இப்பொழுது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை தாண்டவில்லை என்று நினைக்கிறேன். இதில் அதிகப்படியான சிக்கல்கள் இருந்தன. தனி ஒரு நபருக்கு இந்த பிரச்சனை மிகவும் பெரிது தான் என்றே நான் கூறுவேன். இருந்தாலும் நாங்கள் பல நல்ல முடிவுகளை எடுத்தோம். சீனாவில் இருந்து வரும் மக்களுக்கு தடைவிதித்ததும், நாட்டின் எல்லைகளை மூடியதும் நாங்கள் எடுத்த மிக முக்கிய முடிவுகள்.

சிறப்பாக பணியாற்றி உள்ளோம் என நினைக்கிறேன். தொற்று பரவுவதைத் கட்டுப்படுத்தியதன் மூலம் லட்சக்கணக்கான உயிர்கள் போவதை தடுத்து உள்ளோம். இதனால் மீண்டும் அமெரிக்க அதிபர் ஆவதற்கு அதிக அளவு தகுதி உடையவன் நான்” எனக் கூறினார். அமெரிக்காவில் கொரோனா தொற்றினால் இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு 56 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |