Categories
அரசியல் மாநில செய்திகள்

AM, PM எதுவுமே தெரியாது… DMK அரசின் பொங்கல்… மறக்கவே முடியல … ”அந்த விஷயத்தை” நினைவுபடுத்திய எடப்பாடி ..!!

அதிமுக சார்பில் கோவையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேரளாவில் தென் மாநில முதலமைச்சருடைய கூட்டத்தை கூட்டினார். அதற்கு  கேரளாவிற்கு சென்றார் நம்முடைய முதலமைச்சர் ஸ்டாலின்.

அதில் கேரள முதலமைச்சரை சந்தித்து ஆனைமலை நல்லாறு திட்டத்தை பேசுங்க என்று சொன்னோம். ஆனால் அவர் பேசியதாக பத்திரிக்கையில் எந்த செய்தியும் முழுமையாக வரவில்லை. நீண்ட நெடிய நாட்களாக விவசாயிகள், இங்கே இருக்கின்ற பொதுமக்கள் ஆனைமலை நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள்.

ஆனால் மாண்புமிகு அம்மாவுடைய அரசில் தான் நீர் மேலாண்மை திட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்து, இந்த ஆனைமலை நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கடும் முயற்சி எடுத்தோம். மீண்டும் அம்மாவுடைய அரசு அமையும், நிச்சயம் அந்த கோரிக்கை நிறைவேற்றி தரப்படும். AM, PM என்றால் சொகுசு விமானத்தில் வருபவர்களுக்கு தெரியாது

இந்த வெயிலில் இரவு பகலாக போராடி உழைக்கின்ற விவசாயிகளுக்கு தெரியும், இரவு பகல் பாராமல் விசைத்தறியிலே உழைப்பை கொடுக்கின்ற விசைத்தறி தொழிலாளர்களுக்கு தெரியும். இப்போது வேர்வை சிந்தி உழைக்கின்ற உழைப்பாளிகளுக்கு தான் தெரியும். AM,  PM என்றால் என்னவென்று ஒண்ணுமே தெரியாத முதலமைச்சர்.

இவரே தன்னை தானே புகழ்ந்து கொள்கிறார், இவரை போஸ்டர் அடிச்சு வரவேற்க ஓட்டுகிறார்கள், உடனே பார்த்துவிட்டு மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறார். மேடையில் AM PM பார்க்காமல் உழைக்கின்ற முதலமைச்சர் என்று அவரே சொல்லிக்கிறாரு. என்ன உழைத்து நன்மை கிடைத்திருக்கிறது ? இங்கே ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களுடைய வாழ்வாதாரம் மேம்பட வேண்டும் என்பதற்காக அம்மாவுடைய  அரசு நிறைய திட்டங்களை கொடுக்கிறோம். அதோட திமுக ஆட்சியில் பொங்கல் தொகுப்பு கொடுத்தார்கள் எப்பேர்ப்பட்ட பொங்கல் தொகுப்பு, யாராலயும் மறக்க முடியாத பொங்கல் தொகுப்பு கொடுத்த ஒரே அரசாங்கம் ஸ்டாலின் அரசாங்கம் என விமர்சித்தார்.

Categories

Tech |