அதிகாலை முதல் நள்ளிரவு வரை வேலை பார்க்கும் ஜனாதிபதி நான்தான் என அதிபர் டிரம்ப் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்
அமெரிக்க அதிபர் டிரம்ப் மதிய வேளையில் தான் அலுவலகத்திற்கு செல்வதாகவும் தனது படுக்கையறையில் பிடித்தமான உணவு வகைகளை சாப்பிட்டு மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அமெரிக்கப் பத்திரிகைகளில் செய்தி ஒன்று வெளியானது. இதனைத்தொடர்ந்து இதற்கு மறுப்பு தெரிவித்த டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “என்னை பற்றி தெரியாத மூன்றாம் தர நிருபர் எனது பணி மற்றும் உணவு பழக்கம் குறித்து பொய்யாக எழுதியுள்ளார்.
என்னை பற்றி நன்றாக தெரிந்தவர்கள் அமெரிக்க ஜனாதிபதிகளில் மிகவும் கடினமாக உழைப்பவன் நான் என கூறுகிறார்கள். அது எல்லாம் பற்றி எனக்கு தெரியாது. அதிகாலையிலேயே அலுவலகத்திற்கு வந்து நள்ளிரவு வரை நான் வேலை பார்க்கிறேன். அதிலும் சில மாதங்களாக நான் வெள்ளை மாளிகையை விட்டு வெளியில் சென்றதில்லை” என பதிவிட்டுள்ளார்.