Categories
தேசிய செய்திகள்

அம்மாடியோ… என்னடா இது ஒரு காரையே காணோம்… பள்ளத்தில் விழுந்து மாயமான கார்… வைரலாகும் வீடியோ…!!!

மும்பையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் கார் ஒன்று சில நிமிடங்களில் மூழ்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

மராட்டிய மாநிலத்தில் கடந்த வாரம் முதலே கனமழை பெய்து வருகின்றது. இதனால் மும்பை உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ளத்தில் சிக்கி உள்ளது. மராட்டிய மாநில தலைநகர் மும்பை மற்றும் கொங்கன் பகுதியில் கடந்த புதன்கிழமை பருவ மழை தொடங்கியது. கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக மும்பையில் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியது. தாழ்வான இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்தது. சாலைகளிலும், தண்டவாளங்களில் வெள்ளம் சூழ்ந்த காரணத்தினால் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் மும்பையின் காட்கோபர் என்ற பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் அப்படியே உள்ளே செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது. சிறிய பலமாக தோன்றினாலும் ஒரு காரே மூழ்கி சிறு நிமிடத்தில் அந்த பள்ளத்துக்குள் ஒரு கார் இருப்பதே தெரியாத வகையில் மறைந்து போனது மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த காட்சிகள் தற்போது அதிக அளவில் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றது.

Categories

Tech |