நடிகர் விஷால் துபாயில் நடக்கும் படப்பிடிப்பில் 50 அடி உயரத்திலிருந்து குதிக்க தயாராகியுள்ளார்.
முன்னணி நடிகர் விஷால் நடிப்பில் சில நாட்களுக்கு முன்பு வெளியான “சக்ரா” திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதை தொடர்ந்து விஷால் நடிக்கும் அடுத்த படத்தை ஆனந்த் ஷங்கர் இயக்கி வருகிறார். “எனிமி” என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பிரகாஷ்ராஜ், கருணாகரன், மம்தா மோகன்தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
மேலும் நடிகர் ஆர்யா இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு துபாயில் நடைபெற்று வருகிறது. அங்கு எடுக்கப்படும் காட்சி ஒன்றில் நடிகர் விஷால் 50 அடி உயரத்திலிருந்து குதிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவர் எந்த இடத்திலிருந்து குதிக்கப் போகிறார் என்பது குறித்த புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.