Categories
தேசிய செய்திகள்

அம்மாடியோ..! “21 ஆண்டுகள் ஆயிட்டு”…. இந்தியாவில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்ட பிரபஞ்ச அழகி….!!!!

இந்தியாவை சேர்ந்த மாடல் அழகியான ஹர்னாஸ் சாந்து 2021 ஆம் வருடத்துக்கான பிரபஞ்ச அழகி பட்டத்தை பெற்றுள்ளார்.

இஸ்ரேலின் சுற்றுலாத்தளமான எய்லட் நகரிலுள்ள யுனிவர்ஸ் டோமில் 2021-ஆம் வருடத்துக்கான பிரபஞ்ச அழகியை தேர்ந்தெடுக்கும் போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 80 அழகிகள் கலந்து கொண்டனர். இதனையடுத்து பல்வேறு சுற்றுகளாக நடைபெற்ற அந்த போட்டியின் இறுதியில், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஹர்னாஸ் சாந்து என்பவர் 2021-ஆம் வருடத்துக்கான பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றுள்ளார்.

2021 ஆம் வருடத்துக்கான பிரபஞ்ச அழகியாக வெற்றியடைந்த ஹர்னாஸ் சாந்துவுக்கு முன்னாள் பிரபஞ்ச அழகியான மெக்சிகோவை சேர்ந்த ஆண்ட்ரியா மெசா மகுடம் சூட்டினார். அதன்பின் 2-ம் இடத்தை பராகுவே நாட்டை சேர்ந்த நதியா ஃ பெரீரா மற்றும் 3-ம் இடத்தை தென் ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த லலேலா மஸ்வானே ஆகியோர் பிடித்தனர். இதில் மாடல் அழகியான ஹர்னாஸ் சார்ந்து, தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை சண்டிகரில் முடித்ததாக தெரிகிறது. இவர் பல்வேறு அழகிப் போட்டிகளில் கலந்துகொண்டு பட்டங்களையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது டைம்ஸ் ஃ ப்ரெஷ் ஃபேஸ் மிஸ் சண்டிகர் 2017-ல், மிஸ் மேக்ஸ் எமர்ஜிங் ஸ்டார் இந்தியா 2018 மற்றும் ஃபெமினா மிஸ் இந்தியா பஞ்சாப் 2019 ஆகிய படங்களையும் ஹர்னாஸ் சாந்து பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி யாரா தியான் பூ பரன் மற்றும் பாய் ஜி குட்டாங்கே போன்ற பஞ்சாபி படங்களிலும் ஹர்னாஸ் சாந்து நடித்துள்ளார். இந்தியாவில் சுஷ்மிதா சென், லாரா தத்தா ஆகியோர் தொடர்ந்து ஹர்னாஸ் சாந்து மகுடம் சூட்டியுள்ளார். இதற்கு முன்பாக இந்தியா சார்பாக லாரா தாத்தா 2020-ஆம் ஆண்டில் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்று இருந்தார். தற்போது 21 வருடங்களுக்கு பின் இந்தியாவில் இருந்து ஹர்னாஸ் சாந்து பிரபஞ்ச அழகியாக வெற்றி வாகை சூடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |